
நயினாதீவு பெரியபுலத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, சிங்கப்பூர், ஆப்பிரிக்கா Botswana ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஈஸ்வரன் கந்தையா அவர்கள் 15-06-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி கற்று பின்னர் 1974-ல் பேராதனை பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். பட்டம் பெற்ற பிறகு, அவர் யாழ்ப்பாணக் கல்வித் துறையிலும், பின்னர் போஸ்ட்வானா, சிங்கப்பூர் மற்றும் பலவற்றிலும் பணியாற்றினார். இறுதியாக, 2019-ல் ஓய்வு பெறுவதற்கு முன்பு கனடா டொராண்டோவில் ஜெனிவர்/WSP-ல் பணியாற்றினார். அன்னார், முருகேசு கந்தையா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வராஜா திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,ராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,சிவதனுஷன், சங்கவை மற்றும் வானதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான செல்வராஜா திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்றவர்களான சிவஞானம், திருச்செல்வம், கருணாநதி, கந்தவேல் மற்றும் திருமகள்(கனடா), ராஜலக்ஷ்மி(மணி – கனடா) ஆகியோரின் சகோதரரும், ராஜவதி(பிரித்தானியா), காலஞ்சென்ற செல்வகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Thursday, 20 Jun 2024 10:00 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர் | |
+14165573686 |