JaffnaMullaitivuObituaryVavuniya

திரு சிதம்பரப்பிள்ளை மகேந்திரராஜா

முல்லைத்தீவு குமுழமுனை முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், இல. 36/1, 3ம் ஒழுங்கை, பண்டாரிகுளம், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை மகேந்திரராஜா அவர்கள் 07-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயாத்துரை சவுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவானந்தராணி(ஆசிரியை- விபுலானந்தாக் கல்லூரி) அவர்களின் பாசமிகு கணவரும்,

விபிஷன்(வைத்தியர்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை), ஜாதவன்(கணினி பொறியியலாளர், கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான காந்தராணி, சேனாதிராஜா, மங்கையர்க்கரசி மற்றும் தெய்வேந்திரம்பிள்ளை(முன்னைநாள் கிராம சேவகர்,நெடுங்கேணி), சிவஞானசுந்தரம்பிள்ளை, புஸ்பலதா, செல்வரத்தினம், லோகேஸ்வரன்(ஆசிரியர், மல்லாவி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஐங்கரலிங்கம்(லண்டன்), அமிர்தலிங்கம்(சுவிஸ்), செல்வராணி(சுவிஸ்), பிறேமராணி(லண்டன்), சுதாஜினி(ஆசிரியர், மல்லாவி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
இல. 36/1, 3ஆம் ஒழுங்கை,
பண்டாரிகுளம், வவுனியா 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


விபிஷன் – மகன்
 +94767444934
ஜாதவன் – மகன்
 +94762887033
லோகேஸ்வரன் – சகோதரன்
 +94778084195


கிஸ்ணதாஸ் – உறவினர்
 +94772016740

Related Articles