திரு. பாலசுப்பிரமணியம் சிவானந்தா
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொழம்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசுப்பிரமணியம் சிவானந்தா அவர்கள் 02-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்-பூரணம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஆறுமுகம்-விஜயலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இந்திராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
சண்முகானந்தா, காலஞ்சென்ற சச்சிதானந்தா, விவேகானந்தா, ஸ்கந்தானந்தா, காலஞ்சென்ற நித்தியானந்த தேவி, அருளானந்ததேவி ஆகியோரின் அன்பு சகோதரனும்,
நிருத்தாஞ்சலியின் அன்புத் தந்தையும்,
செந்திமாரனின் (Dollar Corporation) அன்பு மாமனாரும்,
செந்திஆரணியின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் இல-28, விசாகா வீதி, பம்பலப்பிட்டியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
நிருத்தாஞ்சலி (மகள்):- +94 76 440 1271
செந்திமாறன் (மருமகன்):- +94 77 349 3062