யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரம் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கட்டுவன், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சந்திரசேகரம் அவர்கள் 02-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சின்னம்மா தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், முத்துலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
கிஷோக்குமார், சுரேஸ்குமார், ஜெயக்குமார், நிரேஸ், சிந்துஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்லத்துரை, காலஞ்சென்றவர்களான நவரத்தினம், சொக்கலிங்கம், சோதிலிங்கம், கருணாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுஜிதா, நித்திய நிரந்தரி, முகுந்தினி, அம்பிகா அபிராமி, கங்கா தர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஓவியா, நட்ச்சத்திரா, கார்த்திகன், ஆதித்தியன், அனிஷா, லிதுஷன், ஆஷினி, அக்ஷரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-05-2025 சனிக்கிழமை அன்று பி.ப 02:30 மணிமுதல் பி.ப 07:30 மணிவரை பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் பார்வைக்கு வைக்கப்பட்டு, மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
கிஷோ – மகன் | |
+94718518486 | |
சுரேஷ் – மகன் | |
+94776805119 | |
ஜெயம் – மகன் | |
+14163339078 | |
நிரேஷ் – மகன் | |
+94779231901 | |
சிந்துஜன் – மகன் | |
+447578155084 |