JaffnaObituarySrilanka

திரு ஆறுமுகம் மகேந்திரன்

யாழ். சங்கரத்தை, வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் மகேந்திரன் அவர்கள் 19-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-வள்ளியம்மை தம்பதியினரின் பாசமிகு கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி-சுருதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

குசேலா அவர்களின் பாசமிகு ஆருயிர் கணவரும்,

காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், தங்கரத்தினம், M.A.வேலுப்பிள்ளை,  M.A.சுப்பிரமணியம், Dr. M.A. இராஜரட்ணம், செல்லத்துரை, தர்மலிங்கம், புவனேஸ்வரி  ஆகியோரின் அன்பு சகோதரனும்,

திவாகரன் (பொறியிலாளர்-ஐக்கிய அமெரிக்கா), வைத்திய கலாநிதி ரஜனி (பொது வைத்திய நிபுணர்-யாழ் போதனா வைத்தியசாலை), வைத்திய கலாநிதி சுதர்சனா (அவுஸ்திரேலியா), கிரிஜா (சிரேஷ்ட விரிவுரையாளர் விவசாய பீடம்-யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,

ஜோதிகா (பொறியிலாளர்-ஐக்கிய அமெரிக்கா), வைத்திய கலாநிதி ஸ்ரீகிருஷ்ணா (என்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர்-யாழ் போதனா வைத்தியசாலை), ஆரூரன் (கணக்காளர்-அவுஸ்திரேலியா), நிசாந்தன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் -மாவட்டச் செயலகம் யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஸ்வினி, அருணன், ஸ்ரீவாசனி, ஸ்ரீவைஷ்ணவி, அருக்ஷ்ன், அஐந்தன், ஆர்த்திகன், அக்ஷ்யா, ஆதித்யன், பிரதீசன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-10-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2:30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று,  புகழுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

+94 21 225 2519

Related Articles