JaffnaObituarySrilanka

திரு அருள்ராஜ் சுவேந்தன்

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறன்ரோ மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருள்ராஜ் சுவேந்தன் அவர்கள்கடந்த 30-12-2024 திங்கட்கிழமை அன்று மொன்றியலில் இறைவனடி சேர்ந்துள்ளார்.

அன்னார், அருள்ராஜ் (ஆசிரியர் – யாழ்/பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி) –  யமுனா (சமுர்த்தி முகாமையாளர் – சண்டிலிப்பாய பிரதேச செயலகம்) தம்பதியினரின் பாசமிகு மகனும்,

சதுர்த்திகன் அவர்களின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம்-புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான அருளம்பலம்-இரத்தினேஸ்வரி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

விஜயடேஸ்வரன்-நகுலாம்பிகை ஆகியோரின் பெறாமகனும்,

கோதீஸ்வரன்-சியமளா, சுரொஸ்வரன்-தாரணி, யோகேஸ்வரன்- அருந்ததி, ஞானேஸ்வரன்-சுகந்தினி ஆகியோரின் அன்பு மருமகனும்,

யானுஷன் அவர்களின் உடன் பிறவா சகோதரனும்,

டிலானி, டிஷானி, துஸான், கிஸான், நிகேதன், ஜனனி, பிரவீனா, திலக்ஷனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் Aeterna Funeral Home (55 Rue Gince, Montreal) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் (இலங்கை நேரம் இரவு 7:30) புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஆ.அருள்ராஜ் 
 +44 747 677 1567
ச.கமலநாதன்
+1 514 967 2697
கு.குணரட்ணம்
 +1 416 119 9764

Related Articles