அமரர் கந்தையா நாகரத்தினம்
2 ஆம் வட்டாரம் முள்ளியவளையினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழில்சாலையின் முன்னாள் ஊழியருமான கந்தையா நாகரத்தினம் (சுப்பிரமணியம்) 29.01.2023 அன்று காலமானார்.
அன்னார் காலம் சென்ற கந்தையா அன்னம்மா தம்பதிகளின் செல்வப்புதல்வனும், காலம்சென்ற நாகமணி பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும் இராசலட்சுமியின் இணைபிரியாத் துணைவரும்; காலம் சென்ற இராசம்மா, சேதுபதிஅம்மா ஆகியோரின் அன்புத்தம்பியும்;
விஜயராணி, சற்சுதன் (தமிழன்பன்,ஜவான்), சந்திராதரன் (பார்த்தீபன்), மோகனதாஸ் (கெங்கா), இன்பதாசன் (மாவீரர் பரணி), சந்திரரூபன் (ரூபன்), சதீசன், ஆகியோரின் அன்புத்தந்தையும்;
மதியழகன், நந்தினி, தண்மதி (சமுர்த்திவங்கி முள்ளியவளை), கௌரி, சிவலோசினி, செந்தூரி ஆகியோரின் அன்பு மாமனாரும்;
கார்த்திகா, விஜயாலயன் (காலம்சென்ற கனேடிய பொலீஸ் அதிகாரி), ஆதிரையன், எழில்நிலா, அருண்நிலா, சாம்பவி, ஆரணிகா, இளந்திரையன், சுடர், சயூரி, சரிதன் மற்றும் கதீசன், டான்சிகா, குணரூபன், ஈழக்குமரன் ஆகியோரின் அன்புப் பேரனும்;
கவினிகா, ஆலயன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 01.02.2023 புதன் கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று நண்பகல் 12.00 மணியளவில் தகனக்கிரியைக்காக முள்ளியவளை கற்பூரப்புல் இந்து மயானத்திற்கு எடுத்துசெல்லப்படும்.
தகவல்குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு