
யாழ் காரைநகர் அருகம்புலத்தை பிறப்பிடமாகவும், காரைநகர் சைவமகாசபை அருகில் வதிவிடமாகவும், தற்பொழுது இல 117,ஓட்டுமடம் வீதி, சிவலிங்கபளியடி, யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட இராசையா பரமேஸ்வரி அவர்கள் நேற்று 19-02-2022ம் திகதி சனிக்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா சௌந்தரம் தம்பதியரின் சிரேஷ்ட புதல்வியும்,காலஞ்சென்ற இராசையா (Town Overseer, PWD, Batticaloa) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற செல்லப்பா (வவுனியா), டாக்டர். ஏரம்பு (கொழும்பு), காலஞ்சென்ற செல்வரட்ணம் (தொழில்நுட்ப உத்தியோகத்தர், RDA), பாக்கியம் (காரைநகர்), நடராஜா (காரைநகர்),நல்லம்மா(காரைநகர்), காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி(காரைநகர் ) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,சிவகுமாரன் (ஓய்வுநிலைமுகாமையாளர், இலங்கைவங்கி BOC காரைநகர்), குணரட்ணம் (ஓய்வுநிலை சிரேஷ்ட பொறியியல் உதவியாளர், நீர்வழங்கள்வடிகாலமைப்புச்சபை, யாழ்ப்பாணம்), சிவபாலன் (அவுஸ்ரேலியா), சிவகணேசன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர், RDA, யாழ்ப்பாணம்) ஆகியோரின் தாயாரும்,ஜெயலலிதா, சரோஜாதேவி, கமலாம்பிகை, லலிதாம்பாள் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,சிவதர்சினி தயானந்தன், சிவரஞ்சனி சிவரூபன், விஜயராகவன்(பொறியியல் உதவியாளர்,தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை,யாழ்ப்பாணம்), விஜயதர்சன் (பொறியியல் உதவியாளர்,தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை, யாழ்ப்பாணம்) பிரசாந்த், லக்சாந்த், அபிநயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,சாருஜன், யுவிஷன், சிவீனுஜன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 20-02-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00 மணியளவில் சிவலிங்கப்புளியடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று ,பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
விலாசம்:-இல.117, ஓட்டுமடம் வீதி,சிவலிங்கப்புளியடி, யாழ்ப்பாணம்
| தொடர்புகளுக்கு | |
| | |
![]() ![]() | +94 21 222 5634 |
![]() ![]() | +94 76 584 1136 |
![]() ![]() | +94 77 844 8121 |





