
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் கதிர்காமநாதர் அவர்கள் 07-02-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. இராசரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
வைத்தியநாதர்(இங்கிலாந்து) அவர்களின் அன்புச் சகோதரரும்,
சாந்தா வைத்தியநாதர் அவர்களின் அன்பு மைத்துனரும்,
சிதம்பரநாதன்(இங்கிலாந்து), அபிராமி(ஜேர்மனி), முருகதாஸ்(அவுஸ்திரேலியா), நமசிவாயம்(ஜேர்மனி), காலஞ்சென்ற திலகவதி, Dr. செல்வலக்ஸ்மி(CSR, ITI, இலங்கை), ஜெயக்குமார்(பிராந்திய முகாமையாளர், அரச ஊடகத்துறை- லேக்கவுஸ்- Lake House- இலங்கை), துஸ்யந்தி(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வையந்திமாலா(இங்கிலாந்து), நடேஸ்வரன்(ஜேர்மனி), ஜெகந்தினி(அவுஸ்திரேலியா), மாலினி(ஜேர்மனி), செல்வேந்திரன்(கதிரியக்கவியலாளர் மகரகம வைத்தியசாலை- இலங்கை), உதயரஞ்சினி(வனவளப் பாதுகாப்பு திணைக்களம், அபிவிருத்தி உத்தியோகத்தர், இலங்கை), ரமணா(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கௌசல்யா, மயூரன், துவாரகா, துசிபா, துளசி, விஸ்வகரன், நரேஷ், இராகுல், வருணா, கேசுபவன், கிசோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-02-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது வீட்டில் நடைபெற்று, பின்னர் அளவெட்டி மல்லாகம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| நமசி – மகன் | |
![]() ![]() | +4915757913266 |
| ஜெயக்குமார் – மகன் | |
![]() ![]() | +94774439439 |





