BadullaGermanJaffnaObituary

திருமதி முத்துக்குமார் நவநீதம்

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பதுளை, யாழ்ப்பாணம், ஜேர்மனி Bielefeld ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமார் நவநீதம் அவர்கள் 19-01-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அம்மணிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி யோகாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற முத்துக்குமார்(முன்னாள் பதுளை பிரபல வர்த்தகர் T.M Brothers) அவர்களின் பாசமிகு மனைவியும்,

பாலகுமார்(ஜேர்மனி), சாந்திமலர்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துஸ்யந்தினி(ஜேர்மனி), சுந்தரராசா(அப்பன்- கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி, யோகம்மா, காவேரியம்மா, கிருஷ்ணபூபதி, தில்லைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை(சரசு), மருதப்பு, மாணிக்கவாசகர், தனலட்சுமி, ஏரம்பு, நல்லதம்பி, தர்மலிங்கம், அம்பலவாணர், பராசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மீரா- Steven, கீர்த்தனா, கோகுலன், தேனுஜன், அட்சாயினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆதிரன் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 சுந்தரராசா(அப்பன்) – மருமகன்
 +14165541193
 சாந்திமலர் – மகள்
 +19057950475
பாலகுமார் – மகன்
 +491714788813
+49521488570

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − three =