MullaitivuObituary

திரு திருநாவுக்கரசு தங்கவேலாயுதம்

முல்லைத்தீவு வற்றாப்பளையை பிறப்பிடமாகவும், தண்ணீரூற்று மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு தங்கவேலாயுதம் அவர்கள் 29-04-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகம்மா தம்பதிகளின் மருமகனும்,

தர்மராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சாயீசன், சாயிப்பிரியன்(யாழ். பல்கலைக்கழக இறுதியாண்டு கலைப்பிரிவு மாணவர்), சாயிரங்கன், சாயீசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற மயில்வாகனம், பொன்னம்பலம், சபாரட்ணம்(லண்டன்- ஓய்வுபெற்ற கூட்டுறவு ஆணையாளர்), மகேஸ்வரி, செல்வநாச்சி, அன்னலட்சுமி, காலஞ்சென்ற சூரியகுமாரன், சந்திரகுமாரன்(கனடா), ஆனந்தரூபன்(பிரான்ஸ்), ரோகினி(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற குகனேசன்(ஓய்வுபெற்ற கிராம அலுவலர்), காலஞ்சென்ற சோமசுந்தரம்(ஓய்வுபெற்ற பொறியியலாளர்), கமலேஸ்வரன்(லண்டன்), கமலராணி, மகேஸ்வரி, தர்மபூபதி(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2021 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கற்பூரப்புல்வெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Address
தண்ணீரூற்று மேற்கு
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
 +94778818290 
சந்திரகுமாரன் – சகோதரர்
 +14163029022 
ஆனந்தரூபன் – சகோதரர்
 +33651672122 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + nineteen =