JaffnaKilinochchiObituaryParantanSrilankaThunnalai

திரு செல்லையா பத்மநாதன்

கிளிநொச்சி பரந்தனைப் பிறப்பிடமாகவும், யாழ். துன்னாலை இந்திரம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும், திக்கத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பத்மநாதன் அவர்கள் 16-04-2025 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா ஜானகிஅம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரசாந்தி, பிரசன்னா(முகாமைத்துவ உதவியாளர் – நீதிமன்றம் பருத்தித்துறை), பிரசாந்த்(ஜேர்மனி), கௌசிகன் (அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், கரவெட்டி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மணிவண்ணன், சுகன்யா, சுபகலா, தரணியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

இராசேந்திரன், இராஜேஸ்வரி, காலஞ்சென்ற பாலசரஸ்வதி மற்றும் ஜெகதீஸ்வரி, காலஞ்சென்ற விஜயராணி மற்றும் வத்சலாதேவி, மகேந்திரன்(ராசப்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அபிசாந், சோதிக்‌ஷா, யஸ்மணி, யதுஸ்கன், டிகோசன், பவிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 10.30 மணியளவில் திக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்திரம்மன் கோவிலடி வீதியூடாக எடுத்துச் செல்லப்பட்டு கியான்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:
சத்திரந்தை,
அல்வாய் வடக்கு,
திக்கம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு


கௌசிகன் – மகன்
 +94778095506
பிரசன்னா – மகன்
 +94758226713
பிரசாந்த் – மகன்
+491751606904

Related Articles