யாழ். கரணவாய் கிழக்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திருநாவுக்கரசு இராஜேஸ்வரி அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம் – வள்ளியம்மை தம்பதியினரின் மகளும், கணபதிப்பிள்ளை – இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,
திருநாவுக்கரசு (தேசிய கடதாசி கூட்டுத்தாபன உத்தியோகத்தர், பணிப்பாளர் – சிவனருள் இல்லம், மன்னார், சமாதான நீதிவான்) அவர்களின் ஆசை மனைவியும்,
சுதாகரன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் – சுகாதார அமைச்சு), கஜகரன் (பொறியியலாளர், விரிவுரையாளர் – இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தனுஷா (ஆசிரியை – கிளி.பரந்தன் மகா வித்தியாலயம்), எழிலரசி (பொறியியலாளர், விரிவுரையாளர் – இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திரிஷ், அபிஷ்கா, அனிஷ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-04-2025 வியாழக்கிழமை காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சோனப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
+94 77 442 6025