JaffnaObituaryPuliyankoodal

நாகரத்தினஐயர் ஏகாம்பிகை அம்மா

புளியங்கூடல் ஊற்காவற்றுறையை பிறப்பிடமாகவும், நாவற்குழியை வசிப்பிடமாகவும் கொண்ட இணுவில் கந்தசுவாமி கோவில் பரம்பரைக் குரு அமரர்.நாகரத்தின ஐயரின் மனைவியான ஏகாம்பிகை, துன்னாலை கோவிற்கடவையில் 30.03.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரக்குருக்கள், குப்புலட்சுமி அவர்களின் அன்பு மகளும், இணுவில் நாகரத்தின ஐயரின் அன்பு மனைவியும் கரீந்திரக்குருக்கள் (கனடா), குகேந்திரக்குருக்கள் (லண்டன்), கார்திகேய ஐயர் (கனடா), கலாதரக்குருக்கள் (ஆசிரியர்-யா/அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலயம், குருக்கள்-கோவிற்கடவை பிள்ளையார் ஆலயம், கோவிற்கடவை ஐயப்பன் ஆலயம்) ஆகியோரின் தாயாரும், ருக்மணி அம்மா (டென்மார்க்), அமரர்.சத்யபாமா, பாலச்சந்திரன் (சபேஸ்), சகுந்தலா ஆகியோரின் சகோதரியும், மேனகா (கனடா), பத்மஸ்ரீ (தோ), மாலா (கொழும்பு), மைதிலி ஆகியோரின் மாமியாரும், சாருஹாசன், கீர்த்திகா, தாரிகா, வாரணன், வாண்மிகா, ஸபரிசசர்மா, காலஞ்சென்ற சாரங்கன் ஆகியோரின் பேர்த்தியாரும், ஒளஷத், ஹார்ணி, மகண்யா, சாத்விக், கிருத்விக் ஆகியோரின் பூட்டியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02.04.2025 நாளை புதன்கிழமை மாலை 3.00 மணியளவில் கோவிற்கடவையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளிற்காக வேரகொண்டை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கன் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
கோவிற்கடவை,
துன்னாலை மத்தி, கரவெட்டி (கோவில் முன்புறம்)
(c-2586)

தகவல்: குடும்பத்தினர் கலாதரக்குருக்கள் (மகன்)
077 969 0990

Related Articles