JaffnaObituarySrilanka

திரு தம்பையா அழகரத்தினம்

யாழ். சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா அழகரத்தினம் அவர்கள் 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா –தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் புத்திரனும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம் – முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பூமணி, மனோன்மணி, சற்குணம் மற்றும் அரசமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

தமிழ்ச்செல்வி (பிரான்ஸ்), கலைச்செல்வி (ஜேர்மனி), கமலச்செல்வி (ஆசிரியை – யாழ். மானிப்பாய் மெமோறியல் ஆங்கில பாடசாலை), திருவருட்செல்வி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வெஞ்சஸ் அன்ரன், பத்மராஜன், எழிலரசன் (நிர்வாக கிராம அலுவலர் – யாழ்ப்பாண பிரதேச செயலகம்) ஆகியோரின்  அன்பு மருமகனும், 

ரெஜிஸ்ரீனா, ரோஸ்ரீனா, அலக்ஷன், பிரியந்தன், கயலினி, கௌலிகா, வேணுகானன், தர்சனன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அலியானவின் அன்புப்  பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-02-2025 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

+94 77 710 9476

Related Articles