யாழ். வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சிற்பனை திருநெல்வேலி ஆடியபாதம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வேதவல்லி அரசரத்தினம் அவர்கள் 14-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
அரசரத்தினம்(சிறி வாணி நகைமாடம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காயத்திரி, காலஞ்சென்ற ஸ்ரீவத்ஸன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற திலகவதி, மகாலிங்கம் மற்றும் கந்தசாமி(மன்னாதி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மணிமாறன், பொன்கைமாறன்,வானதி ஆகியோரின் சிறிய தாயாரும்,
இராணிஅம்மா, யோகம்மா, சிற்றம்பலம், மகாலிங்கம், கோணேசலிங்கம், இந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-01-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 தொடக்கம் 10:00 மணிவரை ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணை மேற்கு சிற்பனையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, வேலணை மேற்கு அம்பலவி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அரசரத்தினம் – கணவர் | |
+94776943137 |
மணிமாறன் – பெறாமகன் | |
+447724412953 |