KarainagarObituary

திருமதி அருள்நந்திசிவம் கணேஸ்வரி

திருமதி அருள்நந்திசிவம் கணேஸ்வரி

திருமதி அருள்நந்திசிவம் கணேஸ்வரி, யாழ். காரைநகர் வேம்படியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 02-10-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா(வைத்திய கலாநிதி- முறிகண்டியான் வைத்தியசாலை) இராசம்மா ஆகியோரின் அருமை மகளும்,

காலஞ்சென்றவர்களான உடையார் நாகலிங்கம் அன்னபூரணி அம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்,

அருள்நந்திசிவம்(ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி அருள்நந்திசிவம் கணேஸ்வரி, அவர்கள் சிவரூபி, சிவபாலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சர்வேஸ்வரன்(பேராசிரியர், சட்டபீடம்- கொழும்புப் பல்கலைக்கழகம்), ஜெயகெளரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துளசி(வைத்திய கலாநிதி- கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை), விசாகன்(சட்டக் கல்லூரி மாணவர்), கஜலட்சுமி(கனடா பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

கணநாதா(அவுஸ்திரேலியா), சண்முகநாதா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலம்பிகை(அவுஸ்திரேலியா), சிவநாயகி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவசங்கர்(உற்பத்தி முகாமையாளர், லண்டன்), சிவகுமார்(வைத்திய கலாநிதி, மருத்துவ இணைப் பேராசிரியர்- அவுஸ்திரேலியா), கஜந்(வைத்திய கலாநிதி- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காரைநகர் வேம்படியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கணநாதா – சகோதரன்
+61490669459

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + twelve =