யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா இராமலிங்கம் அவர்கள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி. இராமலிங்கம் தம்பதியினரின் பாசமிகு மகனும், திரு. திருமதி. நவரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி (கிளி) அவர்களின் பாசமிகு கணவரும்,
சபீனா, சஞ்சீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற செல்வராணி, கந்தசாமி (தேவண்ணை, உரிமையாளர்- விஷ்னு ரேடிங் கொம்பனி, விஷ்ணு கடை -கனடா), ஜெயராணி (கனடா) ஆகியோரின் உடன் பிறந்த சகோதரரும்,
காலஞ்சென்ற அருளம்பலம், சுசி (கனடா), சிவனேசன் (கனடா), காலஞ்சென்ற நகுலேஸ்வரி, சந்திரன் (இலண்டன்), ரவி (பிரான்ஸ்), வதனி, செல்வன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:30 – 3:30 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:30 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிளி (மனைவி) | |
+1 437 227 9581 | |
தேவன் (சகோதரன்) | |
+1 416 688 1770 | |
ஜெயா (சகோதரி) | |
+1 647 852 1634 |
செல்வன் (மைத்துனன்) | |
+1 416 843 1624 |