
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை சிவராஜா அவர்கள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை-சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா-விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
அழகுராணி அவர்களின் அன்புமிக்க கணவரும்,
அனுஷா, அகல்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிரஞ்சன், கஜானந்த் ஆகியோரின் அன்பு நிறைந்த மாமனாரும்,
பிரணன், அஷ்வின், அந்தியா, எய்டன் ஆகியோரின் பேரன்புடைய பேரனும்,
பத்மாவதி, இரட்னேஸ்வரி, சிவானந்தன், காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் அனபுள்ள சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-12-2024 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அனுஷா & அகல்யா
+94 76 232 1244, +94 71 807 7012



