JaffnaObituarySrilanka

திரு சிவசம்பு சிவராமன்

யாழ். காரைநகர் சந்தம் புளியடியை பிறப்பிடமாகவும், புதுறோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசம்பு சிவராமன் அவர்கள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாதம், சிவநாயகம், மகேஸ்வரி, சிவராசா, சிவலிங்கம், சிவனேசன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-12-2024 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் புகழுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

 தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மனோன்மணி (மனைவி):- +94 21 221 1737
சிவாஜினி (பெறாமகள்):- +33 14 898 1359 / +33 76 753 7312‬
சிவகரன் (பெறாமகன்):- +1 416 930 0175

Related Articles