யாழ். புங்குடுதீவைப் 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஹட்சன் றோடு வட்டக்கச்சி கிளிநொச்சி, இல.1 தொண்டமான் நகர் கிழக்கு கிளிநொச்சி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு சற்குணம் அவர்கள் 05-09-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,முத்துக்குமாரு அவர்களின் பாசமிகு மனைவியும்,பாமினி(கனடா), ரகுபதி(பிரான்ஸ்), சாந்தினி(லக்ஷி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவதர்சினி(பிரான்ஸ்), முரளிதரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை, இராசமணி, பாக்கியம் மற்றும் பொன்னுத்துரை(அம்மான்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,பூரணம், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், துரைராசா மற்றும் இரத்தினபூபதி, காலஞ்சென்ற நாகராசா, நவரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,கிளின்ஸ்(செந்தூரி), சியானி, ஹரிஸ், காலஞ்சென்ற ஜெனித்தா மற்றும் அதிஜன், ஜெனித்தன், யருஷன், அபினயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இல 01, தொண்டமான் நகர் கிழக்கு, கிளிநொச்சியில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.