யாழ். மானிப்பாய் சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரகுமார் சாதுசிகாமணிப்பிள்ளை அவர்கள் 17-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சாதுசிகாமணிப்பிள்ளை குணலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், நாகராசா சிந்தாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சுபோதினி அவர்களின் பாசமிகு கணவரும்,டியூக்சிகா, ஜிவாகர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,இந்துஷன் அவர்களின் அன்பு மாமனாரும்,பத்மினிதேவி, காலஞ்சென்ற மதிவதனன், சறோயினி, சூரியகுமார், கலாயினி, நளாயினி, காலஞ்சென்ற டியூக்சந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற தவநாதன், றஞ்சனி, மோகன், ராகுலன், காலஞ்சென்ற அசோகன், வதனி, சுபாஷினி, காலஞ்சென்ற சுபாஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஜயன் அவர்களின் செல்லப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.