
திருமதி விமலாதேவி பாலசுப்பிரமணியம் பிறப்பு : 20-07-1961 இறப்பு : 06-07-2024 இலங்கை யாழ் நல்லூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி விமலாதேவி பாலசுப்பிரமணியம் அவர்கள் 06-07-2024 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான குருசாமி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் ஜானகி தம்பதிகளின் அன்பு மருமகளும், பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், கஜேந்தினி, கஜரூபன், தயாளினி, தனுசாலினி, றம்மியா, ஆகியோரின் அன்புத் தாயாரும், திவாகரன், துசாந்தினி, மனோச்குமார், பிரசன்னா, கஜலக்ஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற கந்தசாமி, இராசேந்திரம், வரதராசா, புஸ்பராணி, கேதீஸ்வரி, பாலச்சந்திரன், ஆகியோரின் அன்புச் சகோதரியும், இராஜேஸ்வரி, திலகேஸ்வரி, கமலேஸ்வரி, கருணாநிதி, நவரத்தினம், இந்திரமதி, கணேஸ்வரி, காலஞ்சென்றவர்களான வடிவாம்பிகை, பரமேஸ்வரி, ஜெகதீஸ்வரி, கலாரஞ்சினி மற்றும், தனலட்சுமி, சித்திராதேவி, திருச்செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், தஸ்மிதா, கரிதஸ்மன், கீர்த்மிதா, கரிஸ்மிதா, பானுகா, அனுசாந், செறோன், ஆக்ஷயன், அக்ஷனா, அஸ்வின், ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் 11-07–2024 வியாழக்கிழமை காலை 8 மணி அளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பின் பூதவுடல் செம்மணி இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு 12 மணியளவில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| ரூபன் மகன் | |
![]() ![]() | +94776458739 |
| மனோஜ் மருமகன் | |
![]() ![]() | +94761772851 |
| சஞ்ஜீவன் – மகன் | |
![]() ![]() | +94779934740 |





