JaffnaObituary

திரு விசாகரத்தின ஐயர் தெய்வேந்திர ஐயர்

யாழ். தொண்டைமானாறைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திர ஐயர் அவர்கள் 10-05-2024 வெள்ளிக்கிழமை அன்று முருகனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா விசாகரத்தின ஐயர்(பிரதம குரு), நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகசாமி ஐயர்(பிரதமகுரு), வேதநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மாணிக்கம் அவர்களின் அன்புக் கணவரும்,

மகேந்திரராணி, ஜெயந்திரன், சசிந்திரன், ரவீந்திரன், காலஞ்சென்ற துஷியேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ச.சிறிரஞ்சன், சசிகலா, ஜெயந்தாதேவி, சுகிர்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கபிலன், லாேகஜன், கணேந்திரன், ஹரேந்திரன், யுகேந்திரன், வைஸ்ணவி, மயூரதி, தீபிகா, சுதர்சினி, கிருஸ்ணேந்திரன், சிவனேந்திரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான நாகேந்திரன், கு.தேவாம்பிகை மற்றும் இராஜேந்திரம், பா. விமலாம்பிகை, விஜேந்திரன், யோகேந்திரன், காலஞ்சென்ற லோகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆறுமுகசாமி ஐயர், சிவசண்முக ஐயர்(பிரதமகுரு) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-05-2024 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பி.ப 04:00 மணியளவில் நடைபெற்று பின்னர் தொண்டைமானாறு காட்டுப்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தெய்வேந்திர ஐயர் சசிந்திர ஐயர் – மகன்
+94772440642

Related Articles