JaffnaObituary

திரு வேலுப்பிள்ளை இராசதுரை

யாழ். மாவிட்டபுரம் 10ம் கட்டை ஒழுங்கை சாயுடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இராசதுரை அவர்கள் 14-03-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிந்தாமணி அவர்களின் பாசமிகு கணவரும்,

பூமணி, பவளம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் கந்தசாமி, வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மைதிலி(ஆசிரியர்- தெல்லிப்பழை சைவப்பிரகாசா வித்தியாசாலை), மஞ்சுளா, கஜேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருதரன்(பிரான்ஸ்), சிவகுமார், சத்தியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிருந்தாபன், ஜென்சியா, ஜெஸ்வின், ஜெசிதன், ஜெனிலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2024 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மாவிட்டபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
+94743739986

Related Articles