கொழும்பு வத்தளையை பிறப்பிடமாகவும், அமெரிக்கா New York கை வதிவிடமாகவும் கொண்ட லதா தெய்வேந்திரன் அவர்களின் சிவபதப் பேறு குறித்த கண்ணீர் அஞ்சலி
என்னவளே என்ன அவசரம்?
என்னவளே! என் உயிரே! இதயநிறை என் மனையாளே! நான் சிறிதும் எண்ணவில்லை பாதியிலே பறந்து போவாயென! காலத்தின் கொடுமையன்றோ காலனின் கெடுவும் கேடன்றோ கண்மணியே! என் கற்பகமே! கண் விழித்து பாராயோ?
இல்லார்க்கும் நல்லோர்க்கும் இரங்கிக் கொடுத்தவளே இதயத்து நல்லொளியே – எங்கள் திருமகளே கண்திறந்து பாராயோ? பண்பின் அணிகலனாய் பாசத்தின் நிறைகுடமாய் அறிவிற்கு இலக்கணமாய் நேர்மைத் திறனோடு நிலைத்த பெருவாழ்வு வாழ்ந்தவளே
கண்கள் கசிந்துருக நெஞ்சம் கலங்கியழ தனித்திங்கே நாம் தவித்திருக்க கானல் நீராக மறைந்தது ஏனோ? குடும்பத்தின் குலமகளே குதூகலத்தின் இருப்பிடமே ஆறாத் துயரதினில் எமை ஆழ்த்திவிட்டு நீறாய் நீவிர் சிவனடி சேர்ந்ததேனோ?
இணையில்லா குணமங்கை – என் இதயத்து இணைமங்கை இடையினிலே தவிக்கவிட்டு இறைபதம் அடைந்ததன் தர்க்கமென்ன? அன்பே! என் ஆரமுதே! மீண்டும் பிறப்புண்டேல் திருமகளாய் திரும்பிவாரீர் காத்திருப்பேன் காலமெல்லாம்
உந்தன் நினைவோடு ஓடட்டும் என்மிகுதி நாட்கள்
பிரிவின் துயருடன்… கணவர், பிள்ளைகள்
கொழும்பு வத்தளையை பிறப்பிடமாகவும், அமெரிக்கா New York இனை வதிவிடமாகவும் கொண்ட லதா தெய்வேந்திரன் அவர்களின் சிவபதப் பேறு குறித்த கண்ணீர் அஞ்சலி
என் அன்னையின் உறவுத்தொடரே ஆர்த்மார்த்த உடன்பிறப்பே… மண்ணுலகில் பெண்ணாக மலர்ந்தவளே – எம் மரியாதையின் உச்சமாய் திகழ்ந்தவளே…
காலமெல்லாம் எம் கனவுகளை சுமந்தவளே கடைசிவரை எமக்காக கண்ணியத்தோடு சுவாசித்தவளே… எம்முயிரை உன்னுயிராய் எப்போதும் நினைத்தவளே -என் தாயின் சொந்தபந்தம் நிலைக்க வாழ்ந்தவளே…
எம்முயிரே, எம்முறவே, எம் சிந்தை நிறைந்தவளே இன்னொரு பிறவியிலும் நீ வேண்டும் என நினைக்க வைத்தவளே… காலம் ஒரு விசித்திரமாகி – உனை காலன் கவர்ந்ததென்ன ? வாழ்க்கை உனக்கிருக்க – இந்த வான்மீகம் உனை அழைத்ததென்ன ??
மீண்டும் நீ பிறப்பெடுப்பாய் – எம் குடும்பத்தின் உறவாவாய் எப்பிறப்பு நாமெடுப்பினும் எம்மவரில் நீயிருப்பாய்…
எம் குடும்ப குலவிளக்கே, எம் உறவின் உயிர்த்தொடுப்பே எம் கனவின் கருப்பொருளே சென்று வா தாயே…. எம்முயிரே,எம் குலமே எமக்கான குலத்தொடர்வே இன்று நீயில்லை என்பது என்றும் நாமில்லை என்றாகும் மீண்டும் நீ வந்தால் தான் எம் குலம் மீளாகும்…
சென்று வா தாயே – எம் செல்ல மகராணியே…!!
உன் பிரிவால் உறைநிலையில் வாடும் மு. குணராசா குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு