ColomboObituaryPungudutivu

திருமதி வடிவேலு கனகம்மா

யாழ். புங்குடுதீவு 12 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகா வித்தியாலயம் (தம்பல காமம்), வேம்படி மகளிர் கல்லூரி (யாழ்ப்பாணம்) இளைப்பாறிய ஆசிரியையுமான திருமதி வடிவேலு கனகம்மா அவர்கள் 06.02.2023 திங்கட் கிழமையன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சின்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சோமசுந்தரம் இராசம்மா (வேலணை) தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற வடிவேலுவின் (இளைப்பாறிய ஆசிரியர்) அன்பு மனைவியும். சுதர்சன் (UK), ஜெயவதனா (Australia), திவாகரன் ஆகியோரின் அன்புத்தாயாரும் . கஜேந்திரனின் (Australia) அன்பு மாமியும். ஹரி கிருஷ்ணாவின் (UNSW) பாட்டியும். காலஞ்சென்ற விசாலாட்சி – ஆறுமுகம் (வித்துவான்). மற்றும் கிருஷ்ணம்மா – தாமோதரம் பிள்ளை (சங்கீத பூஷணம்) ஈஸ்வரி விஜயரத்தினம், சிவயோகம் பரமலிங்கம் , கலைமகள் இலங்கைநேசன் அவர்களது அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற வள்ளியம்மாபிள்ளை ,பரராசசிங்கம் மற்றும், பசுபதி (France), கமலாம்பிகை இராஜேந்திரா (திருகோணமலை), நித்தியானந்தன் (Canada) ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் 09-02-2023 வியாழக்கிழமையன்று காலை 9.30 மணிக்கு பொரளை ஜயரத்தின மலர்ச்சாலையில் ஆரம்பமாகி காலை 11.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு, அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
+9477756448

Related Articles