
அமரர். செல்வி. இந்திராதேவி தம்பிஐயா (இந்திரா அன்றி, இந்திரா டீச்சர்)
அவர்கள் டிசம்பர் 25ம் திகதி 2022, கிறிஸ்துமஸ் தினத்தன்று கர்த்தராகிய இயேசுவுக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார் திரு. ஜேம்ஸ் ஐயம்பிள்ளை தம்பிஐயா, திருமதி ராசம்மா தம்பிஐயா தம்பதிகளின் ஆசை மகளும், காலஞ்சென்ற திருமதி சுஷிலா ஜெயரட்னம் அவர்களதும், தற்போது மொன்றியால் கனடாவில் வசிக்கும் திருமதி கமலா அலோசியஸ் அவர்களதும் அன்புத் தங்கையும், திருமதி கல்யாணி பரமானந்தம் (UK), செல்வி தாரணி ஜெயரட்னம் (USA), திருமதி சுமந்தினி ஜெயரட்னம் (USA), ஆகியோரது பாசத்திற்குரிய அன்றியும், கோவலன், கோகிலா, ரேகான், ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்,
அன்னார் இளமைப் பருவத்திலே, 1968ல் சென்னையிலுள்ள பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில், இரசாயனவியல், பௌதீகவியல், ஆகிய விஞ்ஞானப் பாடங்களில் இளம்கலைப் பட்டதாரியானார். அதன் பின்னர் எத்தியோப்பியா, நைஜீரியா, ஆகிய நாடுகளிலுள்ள பெண்கள் பாடசாலைகளில் விஞ்ஞானக் கல்வியை கற்றுக்கொடுத்ததோடு, பெண்கள் ஆசிரியப் பயற்சிக் கலாசாவையின் விஞ்ஞானப் பிரிவின் இயக்குனராகவும் கடமையாற்றினார். 1988ல் மொன்றியால் கனடாவை தனது வதிவிடமாகக் கொண்டு இங்குள்ள பன்நாட்டு மக்களுக்கும் அளப்பரிய சேவைகளை ஆற்றினார். இங்குள்ள பாடசாலைகளில் சிறார்களுக்கு தமிழ் மொழி ஆசிரியையாகவும் பல வருடங்கள் கடமையாற்றினார். அத்துடன், இங்குள்ள தமிழ் கிறிஸ்தவ சபைகளிலும் வேதப்பாடங்களை பிள்ளைகளுக்கு புகட்டினார். அவரது அசையாத கடவுள் நம்பிக்கை, அயராத உழைப்பு, தியாக சிந்தை, உதவி செய்யும் மனப்பான்மை, தானதர்மங்கள் ஈந்திடும் பண்பு, ஆகியவை மக்கள் மனங்களில் பதிந்தவை. மொன்றியால் வாழ் மக்களால் “இந்திரா அன்றி” என்றும் “இந்திரா டீச்சர்” என்றும் மிக அன்புடன் அழைக்கப்பட்டார்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Tuesday, 17 Jan 2023 5:00 PM – 9:00 PM | 5301 Decarie Boulevard Kane & Fetterly Funeral Home |
| இறுதி அஞ்சலி | ![]() |
| Wednesday, 18 Jan 2023 10:00 AM | 3435 CôteSte- Catherine Cote-des- Neiges Presbyterian |
தொடர்புகளுக்கு






