AnalaitivuObituaryVavuniya

திரு சுப்பிரமணியம் விநாயகமூர்த்தி

யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வவுனியா விசுவமடு தெற்கிலுப்பைக் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் விநாயகமூர்த்தி அவர்கள் 28-12-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்தினிபிள்ளை(ஓய்வுப்பெற்ற அதிபர்-மு/விசுவமடு மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு கணவரும்,

செல்லம்மா, மனோன்மணி, குணபாக்கியம் மற்றும் காலஞ்சென்ற சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், சதாசிவம் மற்றும் நவரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கீதாஞ்சலி(நிர்வாக உத்தியோகத்தர்- மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம், வடமாகாணம்), காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி, கந்தமூர்த்தி மற்றும் கிருபாமூர்த்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ஜெகராஜா, உதயகலா, ராதிகா, ரேணுகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ராஜகீதன், ஆரபிகேசன், கீதகேசன், சங்கவி, வர்ணவி, அபிசா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-12-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோவில்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கீதாஞ்சலி – மகள்
 +94776670611

Related Articles