KadduvanLondonObituary

திருமதி சோபனா சசிதரன்

யூனியன் கல்லூரிப் புகழ்பூத்த பழைய மாணவி, தமிழ்ப்பற்றாளர், யாழ் பல்கலைக்கழக பட்டதாரி, தமிழ் ஆசிரியை திருமதி சோபனா சசிதரன் (80 O/L, 83 A/L Arts. BA Honours in Economics) அவர்கள் 02-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.

தமிழ்மீதும், எம் மண்மீதும் பற்றுக் கொண்ட திருமதி சோபனா சசிதரன் அவர்கள் புலம்பெயர்ந்த தேசத்திலும் பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிப்பதை ஒரு சேவையாக செய்தவர். யாழ் பல்கலைக்கழக நாட்களில் மண்சுமந்த மேனியர் என்ற தமிழ் எழுச்சி நாடகத்துடன் தொடங்கிய அவரின் தமிழ்மீதும், எம் மண்மீதுமிருந்த பற்று அவரது இறுதி மூச்சுவரை தொடர்ந்தது.யாழ் கட்டுவன் ஊரங்குணையை பிறப்பிடமாகவும், இலண்டன் Gants Hill ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னார்,

காலஞ்சென்ற ஓய்வுபெற்ற தபால் அதிபர் (Rt. Postmaster) வேலாயுதம், மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும்,

காலஞ்சென்ற யாழ் இந்துக் கல்லூரி ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் அமரர் அரிராசசிங்கம், காலஞ்சென்ற ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் (Rt. Director of Education) தங்கராணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கணக்காளர் சசிதரன் (Accountant) அவர்களின் பசமிகு மனைவியும்,

மருத்துவ கலாநிதி Dr. அர்ச்சனா, கீர்த்தனா (Undergraduate, Dentistry at King’s College, London) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யூனியன் கல்லூரிப் பழைய மாணவர்களான இரவிக்குமார் (82 O/L, 85 A/L Bio -நேர்வே), திருமதி கல்பனா வசீகரன் (84 O/L, 87 A/L Commerce – இலண்டன்), திருமதி றஞ்சனா ரவீந்திரன் (88 O/L, 91 A/L Arts – அவுஸ்திரேலியா), மகாஜனக் கல்லூரிப் பழைய மாணவன் பிறேம்குமார் (87 O/L, 90 A/L Bio – இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr. சுமதி மகேந்திரன் (சிட்னி), Dr. மகீதரன் (இலண்டன்), திருமதி மயூரி விக்கினேஸ்வரன் (கொழும்பு), சுஜாதரன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாகவும், எமது குடும்பம் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஈமைக்கிரிகைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்

தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சசிதரன்
+ 44 794 664 2206
இரவிக்குமார்
+47 97 07 9544
மகீதரன்
 +44 751 527 6644
கல்பனா
 +44 795 133 6692
மயூரி
 + 94 77 15 1225


Related Articles