திருமதி சின்னம்மா பொன்னையா
முல்லைத்தீவு குமுழமுனை 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னம்மா பொன்னையா அவர்கள் 03-10-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற உதயகுமார்(கனடா) மற்றும் உதயராசா(ஆசிரியர், யாழ். இந்து மகளிர் கல்லூரி), உதயச்சந்திரன்(அலுவலக உதவியாளர்- கூட்டுறவு உதவி ஆணையாளர் அலுவலகம், முல்லைத்தீவு), உதயறஞ்சினி(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கௌரி(கனடா), கலாநிதி சுபாஜினி(சிரேஷ்ர விரிவுரையாளர், புவியியற்றுறை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்), வனிதமலர்(குமுழமுனை), காந்தரூபன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியும்,
நிவேதா(கனடா), கவிநிலவன்(யாழ்ப்பாணம்), பிரணவிகா(யாழ்ப்பாணம்), கவிந்தன்(குமுளமுனை), பிறையாளன்(குமுழமுனை), புவிதரன்(குமுழமுனை), சுலக்சன்(நோர்வே), லதுர்ஷிகா(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
உதயப்பிரியா(கனடா) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாமரைக்கேணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு