
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி தேவராசா அவர்கள் 06-05-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தேவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தேவநந்தன், தேவநந்தினி, சுபாஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரமராஜா, நளாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற யோகம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கனகலிங்கம், அரியமலர், சுகிர்தமலர், நேசமலர், காலஞ்சென்ற பத்மராசா, நவநீதராசா, இரவீந்திரராசா, ஜெயமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பரண்யன், லக்சுயன், கனுஸ்யன், ஆதீஸ், வைஸ்ணவன், தமிழ்வேந்தன், நந்தனா, திரிஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் டச்சுவீதி, கோப்பாய் தெற்கு, கோப்பாய் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இருபாலை செக்கட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| அப்பன் – மருமகன் | |
![]() ![]() | +41782659944 |
| நந்தினி – மகள் | ![]() |
![]() ![]() | +41799422567 |
| சுபா – மகள் | |
![]() ![]() | +94776290269 |





