திரு நடராசா சிவஞானமூர்த்தி
யாழ். அல்வாய் இலகடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Näfels, Glarus, இந்தியா சென்னை மடிப்பாக்கம் ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும், யாழ். சாவகச்சேரி சப்பச்சிமாவடியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட நடராசா சிவஞானமூர்த்தி அவர்கள் 30-04-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா இராசம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சௌந்தரநாயகி(கொழும்பு), சிவபாலன்(டென்மார்க்), ரகுநாதன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லக்ஸ்மன்(பிரான்ஸ்), மிதுனா(பிரித்தானியா), சர்மிளா(சாவகச்சேரி), தனுஷா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரஜனி திலகலிங்கம்(பிரான்ஸ்), பிரகாஸ் செல்வராஜா(பொறியியலாளர்- பிரித்தானியா), ரவிதாசன் சின்னராசா(அபிவிருத்தி உத்தியோகத்தர் கல்வி அமைச்சு வடமாகாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கமலாதேவி(டென்மார்க்), செல்வநாதன்(கனடா), செல்வேந்திரன்(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம், செல்வரத்தினம், செல்வமலர், செல்வபூபதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சத்தியன் சிவஞானசுந்தரம்(இலங்கை), சுகன்யா திவ்வியன்(பிரித்தானியா), சாரங்கன் சிவஞானசுந்தரம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வருண் சிவபாலன்(டென்மார்க்), பிரசாத் சிவபாலன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
ஆதுஷன், ஆதுஷா, ஆருஜா(பிரான்ஸ்), கஷிகா, யருண்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-05-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லக்ஸ்மன் – மகன் | |
+33612156613 | |
பிரகாஸ் – மருமகன் | |
+447882952543 | |
ரவிதாசன் – மருமகன் | |
+94772627797 |