திரு மயில்வாகனம் பொன்னம்பலம்
யாழ். கரணவாய் வடக்கு பொன்னுடையார் வளவைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை யாமா வளவை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பொன்னம்பலம் அவர்கள் 25-06-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி(இளைப்பாறிய ஆசிரியர்- மகாஜனாக் கல்லூரி), தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாதேவி(இளைப்பாறிய விரிவுரையாளர்- கோப்பாய் ஆசிரியர் கலாசாலை, ஆசிரியை- மகாஜனாக் கல்லூரி மற்றும் நடேஸ்வராக் கல்லூரி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற கந்தையா – மங்கையற்கரசி, காலஞ்சென்றவர்களான வள்ளியம்மைப்பிள்ளை – பத்மநாதன் மற்றும் பரமேஸ்வரி – திருச்சந்திரன், தர்மகுலசிங்கம் – நிர்மலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வெற்றிவேலாயுதம்- காலஞ்சென்ற செல்வமலர், அம்பிகாதேவி- பரமநாதன், சயதேவி – காலஞ்சென்ற செல்வராஜன், சகுந்தலாதேவி – சத்தியபாலன், லோகபாலினி – சிறீரங்கநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(சட்டத்தரணி), கந்தையாப்பிள்ளை(இளைப்பாறிய ஆசிரியர்) ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்ற தங்கரட்ணம் அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-06-2021 சனிக்கிழமை அன்று யாமா வளவு, தெல்லிப்பழையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கொத்தியாலடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்