யாழ். இணுவில் மேற்கு தம்பிளாவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கதிர்காமதாசன் அவர்கள் 13-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தனலட்சுமி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கணேசரத்தினம், நல்லதுரை(ஐயையா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
கண்ணன்(கனடா), லலிதாம்பிகை(சாந்தி- நெதர்லாந்து), யோகநாயகி(நோர்வே), ராதிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயவதி, ஜெகநாதன், சிவாநந்தன், முரளிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நல்லம்மா அவர்களின் அன்பு மைத்துனரும்,
பொன்னம்பலம், பாலசிங்கம், அன்னம்மா, பூமணி, ராசமணி, காலஞ்சென்றவர்களான, தனபாக்கியம், சின்னராசா ஆகியோரின் அத்தானும்,
ராசலட்சுமி, அமிர்தகெளரி, கதிர்காமசோதி, பாலசுப்பிரமணியம், அகிலாண்டேஸ்வரி, ஜெகதீஸ்வரி, விக்னராஜா, செல்வராஜா, சிவகாமசுந்தரி, கலைவாணி, ஸ்ரீஸ்கந்தமூர்த்தி ஆகியோரின் சிறிய தந்தையும்,
வளவன், மாறன், விதுரன், அருண், நரேன், யுவன், ஆதிரையான், அஷ்வின், பூஜா, கவின் ஆகியோரின் ஆருயிர்ப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்