ColomboJaffnaObituarySrilanka

திருமதி புனிதமலர் ராஜேந்திரம்

யாழ். சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், கொழும்பு – வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புனிதமலர் ராஜேந்திரம் அவர்கள் 26-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரம் – பராசக்தி தம்பதியினரின் மகளும், 

காலஞ்சென்ற சுப்பையா ராஜேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற செல்வரத்தினம், துரைசாமி, சுந்தரேஸ்வரன் ஆகியோரின் சகோதரியும்,

பிரசாத், பிரபாதேவி, பிருந்தா, பிறைசூடி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஞானரஞ்சன், அகல்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிராமி, ஜெயராமி, ஆதித்யா, அக்ஷயா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

இராசம்மா, இராஜேஸ்வரி, சாரதா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-03-2025 சனிக்கிழமை (23/3, St.Ann’s Road, Wattala) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும், ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

+94 77 735 0027

Related Articles