31st rememberenceObituary
திருமதி துரைசிங்கம் செல்வராணி
யாழ். சாவகச்சேரி கல்வயல் கட்டையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி துரைசிங்கம் செல்வராணி அவர்களின் 31 ஆம் நாள் நினைவஞ்சலியும் ,நன்றி நவிலலும்.
அன்பிற்கு இலக்கணமாய்
அவனியில் வாழ்ந்து
பண்புடைமை காத்து
பக்குவமாய் வழி நடந்தீர்
இரக்கத்தின் இருப்பிடமாய்
ஈகை பல செய்து எல்லோருக்கும்
நல்லவராய் நாணயமாய் நடந்தீர்
ஏனோ இறைவன் இடை நடுவில்
பறித்து விட்டான்..
துன்புற்றோர் துயர் துடைத்து
துணைக்கரமாய் அடைக்கலம்
தந்த உம்மை
ஆண்டவன் ஏனழைத்தான்
பண்புள்ளோரை பல காலம்
வாழவிடக் கூடாதென்றோ?
என் செய்வோம்
இறைவன் சித்தம் இது
இனி காணமுடியாத சோகநிலையோடு
இங்கிருந்தே ஏங்கியழுகிறோம்.
அன்னாரை இழந்து நாம் துயரிலிருக்கும் போது எமக்கு அனைத்து வழியிலும் ஆறுதல் கூறி,அனுதாபம் தெரிவித்த நல்லுள்ளங்களுக்கு குடும்பத்தின் சார்பாக
எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்