யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை செந்தில்மணி அவர்கள் 15-03-2023 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பராசக்தி(தங்கரீச்சர்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாலினி(முன்னாள் ஆசிரியை- Kollupitia Methodist College) அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி(ஆசிரியை, சைவமங்கையர் வித்தியாலயம்), மயூரன்(லண்டன்), துவாரகன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிறேம்குமார், லபோஷி, விவேக்கா ஆகியோரின் அன்பு மாமாவும,
மீனாக்ஷி, ஜெய்சன், மைலேஷ், றோஷன், அனன்யா ஆகியோரின் அன்புப் பேரனும்,
செந்தில்மலர்(கனடா), காலஞ்சென்ற செல்வமலர், நளாயினி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ராஜகுலேந்திரன், சரவணபவன், ரவீந்திரன், ரவிச்சந்திரன், ரவிச்சக்கரவர்த்தி, ரவிராஜசிங்கம், வசந்தினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 16-03-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 09.00 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை பி.ப 02.30 மணியளவில் நடைபெற்று, அதனை தொடர்ந்து பி.ப 05.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்: மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர் | |
+94774762791 |