யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 7 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட K.C. விக்னராஜா அவர்கள் 13-07-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற காங்கேசு செல்வத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம், நகுலாம்பாள் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,வி. சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,குலா விக்னராஜா அவர்களின் பாசமிகு தந்தையும்,லிங்கேஸ்வரி, தம்பி ஜீவரட்ணம், காலஞ்சென்ற உஷாதேவி, கந்தசாமி, சம்பந்தமூர்த்தி, பவளேஸ்வரி, செல்வரட்ணம் சுரேஷ் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இல. 30/1A மலலசேகர – மாவத்தை, கொழும்பு – 07 எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 15-07-2024 திங்கட்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று ந.ப 12:00 மணியளவில் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு பி.ப 12:30 மணியளவில் கனத்தை புதிய மின் தகன நிலையத்தில தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்