JaffnaObituarySrilanka

திருமதி றஞ்சித் ஞானப்பிரகாசம் றீற்றா வரோணிக்கா (சறோ)

யாழ். இல.19, புதுவீதி கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட றஞ்சித் ஞானப்பிரகாசம் றீற்றா வரோணிக்கா அவர்கள் 31-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடியில் நித்திய இளைப்பாறினார்.

அன்னார், காலஞ்சென்ற பெஞ்சமின், மேரிபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை மேரிமாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

புளோரன்ஸ், பிரான்சிஸ்(வித்தி), அருட்தந்தை பேனாட்(பிரான்சிஸ்கன் சபை), ஸ்ரிபன் ஞானசேகரம், காலம்சென்ற றஞ்சினி மற்றும் சந்திரசேகரம், சாந்தசேகரம், றஞ்சசேகரம், விஜயசேகரம், உதயசேகரம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அன்ரனி மரியதாஸ், கொன்சன்ரைன் தேவதாஸ் ஆகியோரின் மைத்துனியும்,

கிறிஸ்லின், ஸ்ரீயித்குமார்(உளநலப்பிரிவு யாழ் போதனா வைத்தியசாலை), மரிய யூலியன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பீருஸ், தர்சினி, தனுசுயா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஈசாம், டின், ஈசாக், மேரியாம், மேரிஷனா, அஸ்விதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 04-11-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் இல.19, புதுவீதி கொய்யாத்தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் இறுதி இரங்கல் ஆராதனை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
 +94777111048

வீடு – குடும்பத்தினர்
 +94212229634

Related Articles