CanadaJaffnaObituary

வே. முத்துக்குமாரசாமிக்குருக்கள் ராஜசேகரன் (ராஜன்)

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வே. முத்துக்குமாரசாமிக்குருக்கள் ராஜசேகரன் அவர்கள் 02-11-2024  சனிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஸ்வர்க்கஸ்ரீ வேதாரண்யேஸ்வரக் குருக்கள் (சுழிபுரம் பறாளாய் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய பரம்பரை முன்னாள் குரு)-ஸ்வர்க்கமதி வீணாகானவிதூஷணி அம்மா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஸ்வர்க்கஸ்ரீ. சிவஸ்ரீ.வே.முத்துக்குமாரசாமிக்குருக்கள் (V. M. சர்மா மாஸ்டர்-முன்னாள் ஆசிரியர் விக்டோரியா கல்லூரி)- ஸ்ரீமதி.ஜெகதாம்பாள் தம்பதிகளின் மூத்தமகனும்,

ஸ்ரீமதி ரத்னா அவர்களின் அன்புக் கணவரும்,

வேதா, வாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிந்து அவர்களின் பாசமிகு மாமனாரும்,

சிவஞான சேகரன் (சங்கர்), உமா, விஜயசேகரன் (ஈசன்), சாந்தி, இந்து சேகரன் (செல்வன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின்  இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிய தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.   

தொடர்புகளுக்கு:

Ratna(Wife): +1 613 793 4188
Shankar(Brother): +1 416 578 6566
Esan(Brother): +1 613 220 9279
Selvan(Brother): +44 795 740 6826

Related Articles