திருமதி. மகேஸ்வரி இலட்சுமணன்
புங்கையின் மங்காப் புகழே.. மைந்தன் இலட்சுமணன் நிழலின் உருவே.. அம்சங்கள் நிறைந்த தீவில்
அழகிய வாழ்வின் ஒளியே.. வாழ்ந்த வாழ்வின் நிறைவாய்.. வையகம் முடித்து சென்ற
நாளினில்.. வண்ங்குகின்றோம்.. நமச்சிவாயன் நிழலடி சேர்வீர்..
தீவகத்தின் ஒளியாய் வந்து.. வட்பால் எங்கும் வியாபித்து.. எல்லோர் மனங்களிலும்
வாழும்.. இளங்கோவன் ஐயாவைத் தந்தீர்.
நேர்வழி செல்லும், சத்திய வாழ்வின் முத்து.. ஆழ்கலி சூழ்ந்த தீவினில் தென்றலாய் வீசும்
சிகரம். வடபகுதி கல்விக் கண்களைத் திறக்கும்.. தக்கதோர் சான்றோரைத் தந்த..
மகேஸ்வரி அம்மா தாயே..
மரணத்தை வென்று வாழ்வில்.. எல்லோரும் இன்புற்றிருக்க ஏற்றவழி வகைகள் செய்தபுங்கையின்
வழித்தோன்றலில் சிறந்தபூமகளே வணங்குகின்றோம்.
தலை வணங்கி அஞ்சலிக்கின்றோம், புங்குடுதீவு சுவிஸ் மக்கள் ஒன்றியம், பூத்தூவி வண்ங்கி
அஞ்சலித்து.. வழியனுப்பி வணங்குகின்றோம்.. வழிநெடுக பூத்தூவுகின்றோம்..
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
அஞ்சலித்து வண்ங்குவோர்…
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிட்ஸர்லாந்து