யாழ். வெள்ளாம் போக்கட்டி கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தெய்வானைப்பள்ளை சிவகடாட்சம் அவர்கள் 10-12-2024 செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து-சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், வேலுப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிவகடாட்சம் (ஓய்வு நிலை தபால் அலுவலகர் – தணக்காய் வவுனிக்குளம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவலோகநாயகி (பரிசாரகர் – பிரதேச வைத்தியசாலை கொடிகாமம்), சிவசுமதி, சிவரூபன் (ரூபன் எலக்ரிக்கல் – கொடிகாமம்), சிறீகரன் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராசசுகுமார் (பாபு), கிருபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், இராசலட்சுமி, மகேஸ்வரி மற்றும் நேசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-10-2024 புதன்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கச்சாய் எறியால்ப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
லோஜி மகள் | |
+94 77 401 8364 |
ரூபன் மகன் | |
+94 77 635 1876 |
கரன் மகன் | |
+61 41 566 2315 |